உலக செய்திகள்
பல்சுவை அம்சங்கள்
உள்நாட்டு
வருடாந்த இப்தார் நிகழ்வு..!
ஹாசிம் உமர் பவுன்டேசன் அனுசரனையில் மக்கொனை அஹதிய்யாப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு 2026-03-01ஆந் திகதி மாலை 5.00 மணிக்கு மக்கொனை, காலி வீதியில் அமைந்துள்ள Waters Meet Reception மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மக்கொனை அஹதிய்யாப் பாடசாலையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிள மொழிகளில் சமயக் கல்வியைத் தொடர்கின்ற சுமார் 200 மாணவ மாணவிகள், 23 ஆசிரியர்கள், 13 அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மக்கொனை பள்ளிவாயில்களில் கடமையாற்றும் மௌலவிமார்கள் உட்பட சுமார் 250 பேர்களுக்கு இவ்இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹாசிம் உமர் பவுன்டேசனின் ஸ்தாபகர் அல்ஹாஜ் புரவலர் ஹாசிம் உமர் அவர்களினால் இரண்டாவது தடவையாகவும் வழங்கி வைக்கப்பட் மேற்படி நிதி, மக்கொனை அஹதிய்யாப் பாடசாலையின் வெளிநாடுவாழ் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் தொடர்ந்து 14ஆவது வருடமாக மிகவும் சிறப்பாக இவ்இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
விசேட அம்சமாக மாணவர்களின் இஸ்லாமிய நிகழச்சிகள் பயான் மற்றும் விசேட துஆப் பிரார்த்தனையும் என்பன இடம்பெற்றன.
வெளிநாட்டு
முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கைது!
பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக அவர் தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அன்றே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அண்ட்ரூ கொண்டிருந்த நீண்டகாலத் தொடர்புகள் மற்றும் அண்மையில் வெளியான ‘எப்ஸ்டீன் ஆவணங்கள்’ (Epstein Files) இந்த கைதுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
2010-ல் அண்ட்ரூ வர்த்தகத் தூதராக இருந்தபோது, பிரித்தானிய அரசாங்கத்தின் மிக ரகசியமான வர்த்தகத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நோர்போக்கில் உள்ள அவரது இல்லம் மற்றும் ‘சாண்ட்ரிங்ஹாம்’ எஸ்டேட்டில் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அவரது ‘இளவரசர்’ மற்றும் ‘டியூக் ஆஃப் யார்க்’ பட்டங்கள் பறிக்கப்பட்டதால், அவர் தற்போது ஒரு சாதாரண குடிமகனாகவே சட்டத்தை எதிர்கொள்கிறார்.
சட்டம் தனது கடமையைச் செய்யும்” என மன்னர் சார்ள்ஸ் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
அண்மைச் செய்திகள்
வருடாந்த இப்தார் நிகழ்வு..!
ஹாசிம் உமர் பவுன்டேசன் அனுசரனையில் மக்கொனை அஹதிய்யாப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு 2026-03-01ஆந் திகதி மாலை 5.00 மணிக்கு மக்கொனை, காலி வீதியில் அமைந்துள்ள Waters Meet Reception மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மக்கொனை அஹதிய்யாப்…
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது..!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது 37 நாட்களுக்குப்…
இளையராஜா இசையில் ‘அந்தோனி…!
இலங்கைத் தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு இட்டுச் செல்லும் முயற்சியாக உருவாகியுள்ள அந்தோனி’திரைப்படத்தின் விசேட ஊடக சந்திப்பு 27.02.2026 கொழும்பில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்து மீனவ வாழ்வியலை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், காதலும் விறுவிறுப்பான த்ரில்லரும் கலந்த கதைக் களத்தைக் கொண்டுள்ளது. இலங்கைத்…
மத்திய கிழக்குக்கான வானூர்தி சேவைகள் ரத்து..!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்று முன்னெடுக்கப்படவிருந்த அனைத்து வானூர்தி சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்றைய வானிலை..!
இன்றைய வானிலை 2026.03.01 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். கடல் பிராந்தியங்களில் ********** நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலை காணப்படும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு…
சிரேஷ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமாகிய மொஹமட் சாலிஹீன் ">


