ஆர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இன்று (13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்து தனது இந்திய விஜயத்தை ஆரம்பித்தார். அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையம் மற்றும் ஹோட்டல் முன்பாக திரண்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

14 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த விஜயம் “GOAT India Tour 2025” எனப் பெயரிடப்பட்டுள்ளது. கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புதுடெல்லி ஆகிய நகரங்களில் மெஸ்ஸி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெறும் வரவேற்பு நிகழ்வில் ஷாருக்கான், சௌரவ் கங்குலி கலந்துகொள்ளவுள்ளனர். மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க 100 ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான கட்டணம் இந்திய ரூபா சுமார் 10 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *