பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக அவர் தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அன்றே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அண்ட்ரூ கொண்டிருந்த நீண்டகாலத் தொடர்புகள் மற்றும் அண்மையில் வெளியான ‘எப்ஸ்டீன் ஆவணங்கள்’ (Epstein Files) இந்த கைதுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
2010-ல் அண்ட்ரூ வர்த்தகத் தூதராக இருந்தபோது, பிரித்தானிய அரசாங்கத்தின் மிக ரகசியமான வர்த்தகத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நோர்போக்கில் உள்ள அவரது இல்லம் மற்றும் ‘சாண்ட்ரிங்ஹாம்’ எஸ்டேட்டில் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அவரது ‘இளவரசர்’ மற்றும் ‘டியூக் ஆஃப் யார்க்’ பட்டங்கள் பறிக்கப்பட்டதால், அவர் தற்போது ஒரு சாதாரண குடிமகனாகவே சட்டத்தை எதிர்கொள்கிறார்.
சட்டம் தனது கடமையைச் செய்யும்” என மன்னர் சார்ள்ஸ் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.