36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவுடன் இணைந்து நடைபெற்ற நுவரெலியா அனைத்து இளைஞர் மன்றங்களுக்கான மாவட்ட விளையாட்டு விழாவில், தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவை பிரதிநித்துவப்படுத்திய பெண்கள் கால்பந்து அணி மற்றும் பெண்கள் எல்லே அணி ஆகிய இரண்டும் முதல் இடங்களை பெற்று தேசிய போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.

 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவுடன் இணைந்து*, தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவின் அனைத்து இளைஞர் மன்றங்களுக்கான பிரதேச விளையாட்டு விழா 2026-06-26 வெள்ளிக்கிழமை தலவாக்கலை, லிதுலா நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் மன்ற ஆண் மற்றும் பெண் வீரர், வீராங்கனைகள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு. மஞ்சுல சுரவீர ஆராச்சி அவர்கள் உட்பட அரசியல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தலவாக்கலை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் அவர்கள், நிர்வாக அதிகாரி, தேசிய இளைஞர் சேவைகள் பேரவையின் மாவட்ட உதவி பணிப்பாளர் உள்ளிட்ட கௌரவ அழைப்பாளர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கொட்டகல இளைஞர் மன்றம் வென்றது.

சதீஷ்
தேசிய இளைஞர் சேவை மன்ற அதிகாரி தலவாக்கலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *