உள்நாட்டு

கல்வி சீர்திருத்தம் தொடரும்..!
கல்வி சீர்திருத்தம் தொடரும்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டிய ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்வித் துறை தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கொண்ட முறையான பொறிமுறையின் மேற்பார்வையின் கீழ் அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அவர்கள் இங்கு முன்மொழிந்தனர்.

கல்வி மறுசீரமைப்புகளை வெற்றிகரமாக்குவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தியாவசியமானது என்றும், சந்தேகம் அல்லது அவநம்பிக்கையுடன் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய கல்வி மறுசீரமைப்புகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

அரசாங்கம் தொடங்கியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, முதலாம் தர மறுசீரமைப்பு செயற்பாடுகளைத் திட்டமிட்டபடி செயற்படுத்துவதாகவும், ஆனால் மொடியுல்களைத் தயாரிப்பதில் எழுந்துள்ள சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சியில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்து 6ஆம் வகுப்பு பாட மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போட்கள், தொலைக்காட்சிகள் மற்றும் கணனிகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றோரின் பணத்தில் அன்றி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

மேலும், மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் இங்கு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இலங்கை பிரிவெனா ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் வண. வகமுல்லே உதித தேரர், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. யல்வெல பஞ்ஞாசேகர தேரர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலஹப்பெரும, கல்வி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.ஜி.பி.எல். லால் குமார, அதிபர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ ஆகியோர் உட்பட பல ஆசிரியர் தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இதில் கலந்து கொண்டனர்.

தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-01-13

அடிக்கல் நாட்டப்பட்டது..!
அடிக்கல் நாட்டப்பட்டது..!
‘டித்வா’ சூறாவளி அரசின் வேலைத்திட்டங்களை தடுக்காது..!
‘டித்வா’ சூறாவளி அரசின் வேலைத்திட்டங்களை தடுக்காது..!
Morden iconic awards..!
Morden iconic awards..!

வெளிநாட்டு

1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!
1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!

அமெரிக்காவின் ‘பவர்பால்’ லொத்தர் சீட்டிழுப்பில், ஆர்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார்.

இது அமெரிக்க லொத்தர் வரலாற்றில் தனிநபர் ஒருவர் வென்ற இரண்டாவது மிகப்பெரிய பரிசாகும்.

பரிசுத்தொகையை ஒரே தடவையிலோ அல்லது 29 வருட தவணையிலோ பெற்றுக்கொள்ள அவருக்கு வாய்ப்பு உள்ளது.

மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!
மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!
19 பேர் உயிரிழப்பு..!
19 பேர் உயிரிழப்பு..!
அமெரிக்கா எண்ணெய் பறிமுதல்..!
அமெரிக்கா எண்ணெய் பறிமுதல்..!

அண்மைச் செய்திகள்

பொங்கல் வைக்கும் உகந்த நேரங்கள்..!

உலக இந்துக்களால் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுகின்றது. அறுவடை செய்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இத்திருநாளில், சூரிய பொங்கல் வைப்பது சிறப்பு. காலை 6 மணிக்கு முன் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தால்…

இன்றைய வானிலை..!

நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மேல் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு…

பராசக்தி’ வசூலில் சாதனை..!

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ₹27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இது சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியாகிய…

கல்வி சீர்திருத்தம் தொடரும்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு…

அடிக்கல் நாட்டப்பட்டது..!

நானு ஓயா உடரதல்லை கீழ்ப்பிரிவு ஆலயத்துக்கு செல்லும் பாதை மற்றும் ஆலய சுவர் அமைப்பதற்காக இன்றைய தினம் (13) புரட்சிகர மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. புரட்சிகர மக்கள் சக்தியின் நுவரெலியா பிரதேச…