இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்றைய அமர்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டம், மீனவர் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நன்மைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பிரகடனம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அமைப்பது குறித்த பிரேரணையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.