ஹாசிம் உமர் பவுன்டேசன் அனுசரனையில் மக்கொனை அஹதிய்யாப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு 2026-03-01ஆந் திகதி மாலை 5.00 மணிக்கு மக்கொனை, காலி வீதியில் அமைந்துள்ள Waters Meet Reception மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மக்கொனை அஹதிய்யாப் பாடசாலையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிள மொழிகளில் சமயக் கல்வியைத் தொடர்கின்ற சுமார் 200 மாணவ மாணவிகள், 23 ஆசிரியர்கள், 13 அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மக்கொனை பள்ளிவாயில்களில் கடமையாற்றும் மௌலவிமார்கள் உட்பட சுமார் 250 பேர்களுக்கு இவ்இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹாசிம் உமர் பவுன்டேசனின் ஸ்தாபகர் அல்ஹாஜ் புரவலர் ஹாசிம் உமர் அவர்களினால் இரண்டாவது தடவையாகவும் வழங்கி வைக்கப்பட் மேற்படி நிதி, மக்கொனை அஹதிய்யாப் பாடசாலையின் வெளிநாடுவாழ் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் தொடர்ந்து 14ஆவது வருடமாக மிகவும் சிறப்பாக இவ்இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

விசேட அம்சமாக மாணவர்களின் இஸ்லாமிய நிகழச்சிகள் பயான் மற்றும் விசேட துஆப் பிரார்த்தனையும் என்பன இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *