இலங்கைத் தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு இட்டுச் செல்லும் முயற்சியாக உருவாகியுள்ள அந்தோனி’திரைப்படத்தின் விசேட ஊடக சந்திப்பு 27.02.2026 கொழும்பில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்து மீனவ வாழ்வியலை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், காதலும் விறுவிறுப்பான த்ரில்லரும் கலந்த கதைக் களத்தைக் கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
கயல்’ வின்சன்ட் மற்றும் டி.ஜே. பானு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் தென்னிந்தியப் பிரபலங்களான நிழல்கள் ரவி அருள்தாஸ் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
ஓசை பிலிம்ஸ்’ சார்பில் ரமணதாஸ் சத்தியநாதன், சுகந்தினி தயாரித்துள்ள இப்படத்தை, சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ளனர்.

தமிழ் மொழியில் உருவான இப்படம் சிங்களம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘அந்தோனி’ திரைப்படம் எதிர்வரும் 2026 மார்ச் 13-ம் திகதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாகத் திரையிடப்படவுள்ளது.
—