மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

நாட்டில் தற்போது 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.


இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை (மார்ச் 02) பௌர்ணமி விடுமுறை தினமாக இருந்தபோதிலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும்.


ஐஓசி (IOC) மற்றும் சிபெட்கோ (CPC) ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்திற்காகத் தேவையான அளவு மேலதிக பௌசர்களை (Bowser) ஈடுபடுத்தியுள்ளன.


நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால் வழமையான விநியோகத் திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும், பதுக்கல் அல்லது தேவையற்ற அவசர கொள்வனவுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *