நானு ஓயா உடரதல்லை கீழ்ப்பிரிவு ஆலயத்துக்கு செல்லும் பாதை மற்றும் ஆலய சுவர் அமைப்பதற்காக இன்றைய தினம் (13) புரட்சிகர மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புரட்சிகர மக்கள் சக்தியின் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் லலித்குமர் அவர்கள் முன்வைத்த பிரேரணையின் பலனாக பிரதேச சபையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய தினம் (13) புரட்சிகர மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமை
யில் பாதை, சுவருக்கான் அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்வில் உடரதல்லை தோட்ட முகாமையாளர், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் லலித்குமார், புரட்சிகர மக்கள் சக்தியின் இளைஞர் அணி தலைவர் ரூபன், நானு ஓயா பிரதேச பொறுப்பாளர் ரவி மகேஷ் , உடரதல்லை கீழ்ப்பிரிவு இளைஞர் அணி தலைவர் ரகுபிரியன் உட்பட தோட்டக்கமிட்டி தலைவர்கள் ஊர் பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.