வெனிசுலா கடற்கரைக்கு அருகில் ஒரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்கப் படைகள் பறிமுதல் செய்ததாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த நடவடிக்கை, நிக்கோலஸ் மதுரோ அரசுக்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வெனிசுலா இந்த செயலை “சர்வதேச கடற்கொள்ளை” எனக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, வெனிசுலா ஒருபோதும் எண்ணெய் காலனியாக மாறாது என்று மதுரோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.