தினமும் சிறிது நேரம் சத்தமாக சிரிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிரிப்பு மனநிலையை உடனடியாக மேம்படுத்துவதோடு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது.
சத்தமாக சிரிப்பதால் இதயத் துடிப்பு தற்காலிகமாக அதிகரித்து, பின்னர் தசைகள் தளர்ந்து இரத்த அழுத்தம் குறைகிறது. இதன் மூலம் இரத்த ஓட்டம் மேம்பட்டு, இதய நோய் அபாயம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும், சிரிப்பு நுரையீரல் மற்றும் உதரவிதானத்தை செயல்படுத்தி ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதால், மனம் அமைதியாக இருந்து நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது என நிபுணர்கள் விளக்குகின்றனர்.