அல்-ஹஸனியா கிரிகெட் கார்னிவல் சீசன் 2
அல்-ஹஸனியா ம.வி. மக்கொனை
அல்-ஹஸனியா ம.வி. மக்கொனையின் பழைய மாணவர் சங்கத்தினரால் இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிகெட் கார்னிவல் சீசன் 2 எதிர்வரம் 2026 ஜனவரி மாதம் 15, 16,17 மற்றும் 18ஆந் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மக்கொனை அல்-ஹஸனியா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த கிரிகட் கார்னிவல் சுவாரஸ்யமான போட்டியாகவும், சமூக ஈடுபாடு மற்றும் பாடசாலையுடன் இணைந்து சேவையாற்றக்கூடிய ஆவல் கொண்டதாகவும் அமையவுள்ளது. மேற்படி கிரிகட் கார்னிவல் நிகழ்வினை காண்பதற்காகவும், போட்டியாளர்களின் திறமையை பார்வையிடவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த சந்தோசமான நிகழ்ச்சில் அல்-ஹஸனியா மஹா வித்தியாலயத்தின் அனைத்துப் பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை பழைய மாணவர் சங்கத் செயலாளர் ஜனாப் அம்ரி அன்சார் தெரிவித்தார்.