2026 ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மார்ச் 3 அன்று நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் சுமார் 82 நிமிடங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் (Blood Moon) தோன்றும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த முழு சந்திரகிரகணத்தின் முழுமை நிலை (Totality) சுமார் 58 நிமிடங்கள் நீடிக்கும். பூமியின் நிழல் சந்திரனை முழுவதும் மூடுவதால், நிலவு சிவப்பு நிறத்தில் ஒளிரும்.
இந்த அரிய வான்நிகழ்வை கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் பகுதி மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் தெளிவாகக் காண முடியும்.
இந்திய நேரப்படி கிரகணம் மார்ச் 3 அன்று மாலை 02.14 மணிக்கு தொடங்கி இரவு 07.53 மணி வரை நீடிக்கும்.