மொரோக்கோவின் ஃபெஸ் நகரில் அல்-முஸ்தக்பல் பகுதியில் நான்கு மாடி உயரம் கொண்ட இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் திடீரென இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த இரண்டு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவர்.
பல நூற்றாண்டுகளாக பழமையான கட்டடங்கள் உள்ள பகுதியாகிய ஃபெஸில், 2023 நிலநடுக்கத்திற்கு பின் சில கட்டடங்கள் அமைப்பு வலுவிழந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இதேப் பகுதியில் வீடு இடிந்து ஐந்து பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.