செயலிழந்த நீர் திட்டங்களில் 146 மீண்டது – அமைச்சர் சுசில் ரணசிங்க
செயலிழந்திருந்த 156 நீர் வழங்கல் திட்டங்களில் 146 மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 10 திட்டங்களை சீர்செய்யும் பணிகள் தொடர்கிறதாகவும் அவர் கூறினார்.
சீரற்ற வானிலை காரணமாக இந்த 156 திட்டங்களில் 17 திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டவை எனவும் குறிப்பிடப்பட்டது.
தேசிய நீர் வழங்கல் சபைக்கு பாதுகாப்புப் படை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மின்சாரசபை வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் பாராட்டினார்.
நாடு முழுவதும், குறிப்பாக மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட சேதம் 5 பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக மதிப்பிடப்படுகின்றது.
அனைத்து நீர் வழங்கல் திட்டங்களும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.