ஈரானுக்கு ஆதரவளிக்க சீனா மற்றும் ரஷ்யா எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேவைப்படும் போதெல்லாம் அந்தத் தலையீடுகளுக்கு எதிராகச் செயற்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க தாக்குதல்களால் ராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறுவதும், அதிகரித்துள்ளது.
ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி அமெரிக்கா சரியாக அறிந்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், தேவையான இடங்களில் அவர்களை நேரடியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.
 
புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டிப் பேசிய ஹெக்செத், அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரான் இராணுவத்தின் மன உறுதி சிதைந்துள்ளதாகக் கூறினார். இதன் காரணமாக வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேறுவதும், சிரேஷ்ட தலைவர்கள் மத்தியில் கடும் விரக்தி ஏற்பட்டுள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
எங்களிடம் தெரிவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஈரானுக்கான தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவை. கடந்த ஒரு மாதத்திற்குள்ளேயே போருக்கான நிபந்தனைகளை நாங்கள் தீர்மானித்துவிட்டோம். வரும் நாட்கள் மிகவும் முக்கியமானவை, என அவர் தெரிவித்தார்.
 
கடந்த சனிக்கிழமை தாம் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு விஜயம் செய்ததாகவும், அங்கு ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நேரடியாக அவதானித்ததாகவும் ஹெக்செத் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *