சந்தையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தற்காலிகத் தட்டுப்பாடு குறித்து அந்த நிறுவனம் உத்தியோகபூர்வ விளக்கமளித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள 30,000 மெட்ரிக் தொன் எரிவாயு களஞ்சிய முனையத்தை, உள்ளூர் விநியோகத்திற்காகப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள ஒழுங்குமுறை சார்ந்த கட்டுப்பாடுகளே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேங்கியுள்ள எரிவாயு இருப்புகளை விரைவாக விடுவிக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளை உரிய அதிகாரிகளுடன் இணைந்து நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

மாற்று ஏற்பாடாக, சர்வதேச விநியோகத்தர்களிடமிருந்து நேரடியாக எரிவாயுவை இறக்குமதி செய்து கொழும்பு துறைமுகம் ஊடாக நாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

எரிவாயு தொகைகள் வந்தடைந்தவுடன், சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு நாடு முழுவதும் தடையின்றி விநியோகிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தடையற்ற எரிவாயு விநியோகத்தைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *