Add Your Heading Text Here

இலங்கையில் விசர்நாய்க்கடி நோய் தடுப்பு மற்றும் நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அலட்சியமாகச் செயற்படுவதாக கால்நடைவைத்திய சங்கத்தினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் ஆலோசகர் மருத்துவர் சமித் நாணயக்கார இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும்இ அதில் 27 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற செயலால் நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அவர் சாடினார்.

சமூகத்திலிருந்து விசர்நாய்க்கடியை முழுமையாக ஒழிக்க வேண்டுமானால்இ குறைந்தது 70 சதவீத நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


மேலும்இ முறையான கருத்தடை திட்டங்கள் மற்றும் பொறுப்பான செல்லப்பிராணி வளர்ப்பு முறை இல்லாவிட்டால்இ விசர்நாய்க்கடியைக் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த ஒரே ஆரோக்கியம் எனும் கருப்பொருளின் கீழ் ஒரு தேசிய மூலோபாயத்தைத் தயாரிக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *