இலங்கையில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
கடந்த வருடத்தில் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் கடித்ததாலேயே இந் நோய் பரவியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாய்கள், பூனைகள், கீரிப்பிள்ளைகள், அணில்கள் ஆகிய விலங்குகள் கடிப்பதனால் பரவும் நீர்வெறுப்பு நோயானது, கொடிய நோயாக கருதப்படுகிறது.
இது தொடர்பில், விசேட வைத்திய நிபுணர் தெரிவிக்கையில்,
நீர்வெறுப்பு நோய் கொடிய மரணத்தை ஏற்படுத்தும். நாய், பூனை, நரி, அணில், மர அணில், மர நாய், கீரிப்பிள்ளை, மாடு. குதிரை என எந்த விலங்கு கடித்தாலும் இந் நோய் பரவலாம்.
அதன்படி, பூனைகளினாலேயே இந் நோய் அதிகமாக பரவும். குறிப்பாக, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் பூனை கடி சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளது.
எனவே, பூனைக் கடி தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பூனையின் கீறலும் மிகவும் ஆபத்தானது.