டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிரிழந்த அமெரிக்க பணக்காரரும் Macy’s அங்காடி இணை உரிமையாளருமான ஐசிடோர் ஸ்ட்ரஸ் அவர்களின் தங்கக் கைக்கடிகாரம் ஏலத்தில் சாதனை விலையில் விற்க்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடலில் அவரது சடலத்திலிருந்து மீட்கப்பட்ட 18 கரட் தங்கக் கடிகாரம் இங்கிலாந்தின் Henry Aldridge and Son ஏலத்தில் £1.78 மில்லியன் க்கு விற்கப்பட்டது.
இந்தக் கடிகாரம் இதுவரை ஸ்ட்ரஸ் குடும்பத்தினரிடம் இருந்தது. 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது ஐசிடோர் மற்றும் அவரது மனைவி ஐடா இருவரும் உயிரிழந்தனர்.
ஏலத்தில் கூடுதலாக:
* ஐடா ஸ்ட்ரஸ் எழுதிய கடிதம் – £100,000
* டைட்டானிக் பயணிகள் பட்டியல் – £104,000
* கார்பாத்தியா கப்பல் குழுவினருக்கான தங்கப் பதக்கம் – £86,000
மொத்தமாக, டைட்டானிக் தொடர்பான நினைவுப் பொருட்களின் ஏலத்தில் £3 மில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.