பீஜிங்கில் உள்ள ஒரு பூச்சி அருங்காட்சியகம், அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சி தூள் மற்றும் உலர்ந்த மாவுப் புழுக்கள் சேர்க்கப்பட்ட வினோதமான காபியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 45 யுவான் (US$6) மதிப்பிலான இந்த “பூச்சி கோப்பி” எரிந்த மற்றும் லேசான புளிப்பு சுவை கொண்டதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
அருங்காட்சியகத்தின் ஊழியர்கள் தெரிவிப்பதாவது:
* ஜூன் இறுதியில் இந்த புதிய பானம் அறிமுகமானது.
* பூச்சி கருப்பொருள் கொண்ட அருங்காட்சியகம் என்பதால் இது ஒரு பொருத்தமான பானம் என அவர்கள் கருதி உருவாக்கப்பட்டது.
* இதிலுள்ள பொருட்கள் பாரம்பரிய சீன மருத்துவ மூலிகைக் கடைகளில் இருந்து வாங்கப்பட்டதால் பாதுகாப்பானவை எனவும் தெரிவித்தனர்.
மேலும், பிட்சர் தாவர சாறு பானம் மற்றும் ஹாலோவீன் காலத்தில் மட்டுமே விற்கப்பட்ட எறும்பு கோப்பி போன்ற பானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு நாளில் 10 கோப்பைகளுக்கு மேல் விற்கப்படுவதாக அருங்காட்சியகம் கூறினாலும், பல இணையப் பயனர்கள் இந்த புதுமையான பானத்தை சந்தேகத்துடனும் ஆச்சரியத்துடனும் எதிர்கொண்டுள்ளனர்.