ஜப்பானின் வடக்கில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதன் விளைவாக 40 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் ஹொக்கைடோவின் உரகாவா நகரத்தையும் அமோரியின் முட்சு ஒகவாரா துறைமுகத்தையும் தாக்கின.

அமோரி கடற்கரையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் பதிவு செய்யப்பட்ட இந்த நிலநடுக்கம் பல ஆயிரம் குடியிருப்பாளர்களை மின்சாரம் இன்றி தவிக்க வைத்ததுடன், அமோரி மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பலர் காயமடைந்தனர்.

ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாடே மாகாணங்களுக்கு 10 அடி உயரம் வரை சுனாமி எழும் வாய்ப்பு என முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து ஜப்பான் பிரதமர் மூன்று கட்ட மீட்பு நடவடிக்கைகளை அறிவித்து அவசரகால பணிக்குழுவை அமைத்தார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *