ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா, சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
39 வயதான அவர் 87 டெஸ்ட் போட்டிகளில் 6206 ஓட்டங்களையும், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் பெற்றுள்ளார். சிட்னி டெஸ்ட் முடிவின் பின்னர் ஓய்வு பெற்றாலும், பிபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என அவர் தெரிவித்தார்.