லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அமீர்கான், அந்த கதாபாத்திரத்திற்காக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு புதிய படத்தில் பணியாற்ற திட்டமிட்டிருந்தாலும், அது ட்ராப் ஆனதாக தகவல்கள் வெளியானது.
இதற்கு தற்போது அமீர்கான் பதில் அளித்து,
“லோகேஷ் உடன் இன்னும் பேச்சு நடக்கிறது. அவர் விரைவில் மும்பைக்கு வந்து கதை சொல்லவிருக்கிறார். படம் ட்ராப் ஆகவில்லை; இன்னும் உயிருடன் உள்ளது,”
என்று தெரிவித்துள்ளார்.