தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சுந்தர் சி மற்றும் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா, தற்போது திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சுந்தர் சியின் படங்களில் அறிமுகமாவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவர் மலையாளப் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார்.

தமிழில் அஜித் நடித்த வெற்றிப் படத்தின் தலைப்பான ஆரம்பம்’ (Aarambham) என்ற பெயரிலேயே இந்தப் படம் உருவாகிறது.


இயக்குநர் இப்படத்தை சுதேஷ் ஆனி ஈப்பன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகை சரிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் தயாராக உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழா பூஜையைத் தொடர்ந்து, படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துள்ள அவந்திகாவிற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *