மறைந்த தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 16வது சிரார்த்த தினம் இன்றைய தினம் 01.01.2026ம் ஹட்டனில் அமைந்துள்ள அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
புரட்சிகர மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் தியாகராஜா, உட்பட புரட்சிகர மக்கள் சக்தியின் உயர்மட்ட உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், தோட்ட கமிட்டி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
