உலகம் முழுவதும் நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நத்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அண்மைய இயற்கை அனர்த்தங்களின் போது இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம், அன்பு, பகிர்வு மற்றும் தியாகமே நத்தாரின் உண்மையான அர்த்தம் என அவர் வலியுறுத்தினார்.
சவால்களை எதிர்கொண்டு, ஒன்றிணைந்து மீண்டெழ வேண்டும் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.