நிலவும் கனமழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளன.
இதனால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மகாவலி அதிகாரசபை எச்சரித்துள்ளது.
மேலும் பல முக்கிய நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச நீர்மட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.