வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, Google Maps இல் A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அமைச்சரின் X பதிவின்படி, 12,000 கிமீ பிரதான வீதிகளுக்கான நிகழ்நேர தகவல் புதுப்பிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சியின் மூலம் வீதி மூடல், கட்டுமான அறிவிப்பு உள்ளிட்ட 6 வகை நிலை எச்சரிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய அம்சம் பயணத் திட்டமிடலை எளிதாக்கி, நெரிசல் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்கள் தங்கள் Google Maps செயலியைப் புதுப்பித்து மேம்படுத்தப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துமாறும், இந்த முன்முயற்சி டிசம்பர் 31 வரை முன்னோடி திட்டமாக செயல்படும் என்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.