டித்வா புயலால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தயாராக உள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
Rebuilding Sri Lanka திட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதுவரை ரூ. 1,893 மில்லியன் நிதி உதவி கிடைத்துள்ளது.
அனைத்து காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், புயல் சேதங்களுக்கு உடனடி இழப்பீடு வழங்கும் பொறிமுறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
* சிறிய சேதங்களுக்கு உடனடி இழப்பீடு வழங்கல் ஆரம்பம்.
* பெரிய சேதங்களுக்கு தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின் முழு இழப்பீடு; இடைக்காலமாக ஒரு பகுதி முன்கூட்டியே வழங்கப்படும்.
காப்புறுதி நிறுவனங்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தியுள்ளன.