சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ₹27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இது சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியாகிய படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, படம் 2 நாட்களில் மொத்தமாக ₹51 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை தயாரிப்பாளர், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா இணைந்து கொண்டாடிய புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *