தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘ஜனநாயகன்’.
அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால் விஜய் சினிமாவிலிருந்து விலகுகிறார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டாவது பாடல் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
ஜனவரி 9 அன்று வெளியாகவுள்ள நிலையில், வெளிநாட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.
UK-வில் மட்டும் ரூ.1.3 கோடி வசூல், 12,700 டிக்கெட்ஸ் விற்பனையுடன் ‘லியோ’ சாதனையை முறியடித்துள்ளது.
ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்த்து இதுவரை ரூ.1.5 கோடி முன்பதிவு வசூல் கிடைத்துள்ளதாக தகவல்.