ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் திரிஷா, நட்டி நடராஜ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் குறித்து திருப்தி இல்லாததால், சூர்யாவை மீண்டும் அழைத்து சில நாட்கள் மறுபடியும் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தற்போது படம் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஜனவரி 23ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஎப்எக்ஸ் பணிகள் இன்னும் முழுமை பெறாததால் ஏப்ரல் மாதம், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படம் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
‘கருப்பு’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.