ஹைக்கூவில் கலப்போம்
கவிகளாய் உயர்வோம்

46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு வரும் 11.01.2026 அன்று கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது .

இக் கவியரங்கிற்கு தலைமையை ஏற்கிறார் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் உப தலைவி கவிதாயினி திருமதி ஷர்மிளா பார்த்திபன்.

இவ் அமர்வில் கதை சொல்லுதல் மற்றும் கவிப்பயிற்சி போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *