ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று (30) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அதனை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.