சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த பேரழிவில் இலங்கையில் 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.
இதனை நினைவுகூரும் வகையில் இன்று (26) ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படுகிறது. காலை 8.30 முதல் காலி – பெராலிய சுனாமி நினைவுத் தூபியில் பிரதான நினைவுகூரல் நிகழ்வு நடைபெறுவதுடன், காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.