கலாமித்ரா 2026 விருது வழங்கும் விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இன்றைய தினம் காலை மகளிருக்கான நடன போட்டி ,மருதாணி அலங்காரம், சித்திரப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி, என்பன இன்று கொட்டாஞ்சேனை 13ல் கெதிடல் ஆண்கள் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது.
இப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கும், கட்டுரை ,சிறுகதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை ,குறும்பட பிரதியாக்கம் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் வருடம் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
விழாவை முன்னிட்டு இன்று மாலை ஆறு மணிக்கு ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புலவர் ஹாசிம் உமர் அவர்களை கலா மித்ரா விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான புதிய அலை கலை வட்ட சங்க மகளீர் அணிகளுக்கிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது.
இச்சந்திப்பில் ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபனார் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும்,கலைஞர் மேதா, புதிய அலை கலை வட்டத்தின் தலைவர் , செயலாளர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்
