பல்கலை மாணவர்களுக்கு
மடி கணனி அன்பளிப்பு
ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 17ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுங்கத் திணைக்கள முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.நியாஸ்,சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜவ்பர்,தொழில் கல்வி பயிற்சி திணைக்கள உதவி நிர்வாக உத்தியோகத்தர் சஞ்சலா சுபாஷிணி அத்துக்கோரல,சாரவிட்ட இணையதள பொறுப்பாசிரியை சஞ்சீவிகா, சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணிப்பாளர் மரியம்,ஒருங்கிணைப்பாளர்களான ஏ.எஸ். அர்ஹம் சுலைமான், ஆகிப் மொஹமட் மற்றும் பெற்றோர் எனப்பலர் கலந்துகொண்டனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர்
புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தர்மராஜா தனசீலன்-நுவரெலியா,ஏ.டனூசிஜா- மட்டக்களப்பு, எம்.எஸ்.எப்.சமீரா — புத்தளம், எம்.எச். எப்.மிப்லா- திஸ்ஸமஹாராம மற்றும் ஆர்.எம்.எப்.சாதீகா-படல்கும்பர ஆகியோர் புரவலரிடமிருந்து மடி கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.