கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் ஜனாதிபதியின் விஞ்ஞான–தொழில்நுட்ப சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய சந்திப்பு நடத்தினர்.
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், இலங்கையின் மீள்கட்டமைப்பு, மற்றும் வரவிருக்கும் தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை குறித்து கலந்துரையாடப்பட்டது.
உயர்கல்வி, IT, AI, டிஜிட்டல் மயமாக்கல் துறைகளில் ஒத்துழைப்பு, அமெரிக்க முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.