பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கும் என்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த தவறான தகவல்கள், வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கான முயற்சியின் பகுதியாக சிலரால் பரப்பப்படுகின்றன என சங்கத் தலைவர் சரத் ரத்நாயக்க குற்றஞ்சாட்டினார்.
மேலும், முட்டையை ரூ.45க்குள் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.