கட்டானை பொலிஸ் பிரிவில் உள்ள கிம்புலாபிட்டிய பட்டாசு உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்பில் கடும் காயமடைந்த அவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மரணமடைந்தார்.
நிறுவனத்தின் வெளிப்புற கொட்டகையில் வெடிப்பு ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
கட்டானை பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.