யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 35 வயதான அநுராதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா சிவகுமார் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
யாழில் பணியாற்றி வந்த அவர், அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்தபோது செம்மணி பகுதியில் பேருந்தின் மிதிபலகையில் நின்றபடி முகம் கழுவ முயன்றுள்ளார். அச்சமயம் பேருந்து வளைவு எடுக்கும்போது கீழே விழுந்து மயக்கமுற்றார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துக்கான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.