.

பல்கலை மாணவர்களுக்கு
மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 21ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (16-05-2026) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் செய்திப் பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் சுதர்மன் ரதலியகொட,விசேட அதிதியாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் செய்திப்பிரிவின் பிரதான பொறுப்பாளர் சி.பி.எம்.சியாம், எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா,சிலோன் ஹபீபீ ஸ்தாபகர் ஹபீபீ, சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜவ்பர்,தயாரிப்பாளர் எம்.எச்.எப். ரின்ஸா, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஜிப்ரியா இப்ராஹிம், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணிப்பாளர் மரியம்,அர்ஹம் சுலைமான் மற்றும் பெற்றோர் எனப்பலர் கலந்துகொண்டனர்.


ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர்
புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நயோமி அமரசிங்க-வெலிப்பன்ன, எம்.ஆர்.எப்.ரிஸ்கா-பாணந்துறை, எம்.இஸட்.ஹாஜரா ,தர்ஹா டவுன் மற்றும் எம்.ரி.எப்.ரஷீதா —
அநுராதபுரம் ஆகியோர் புரவலரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.


இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு சிறப்புப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

photography by farook issam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *