அகில இலங்கை கம்பன் கழகத்தினால் 2026ஆம் ஆண்டுக்கான ‘கம்பன் புகழ்” விருதினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கி கௌரவித்தனர்.

 

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா – 2026இன் இறுதி நாள் வைபவம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கம்பன் கழகம் ஆறு சான்றோர்களுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தொழிலதிபர் சி.தனபாலா, சிரேஷ்ட பொறியியலாளர் சி.உருத்திரலிங்கம், சுற்றுலா அமைச்சின் முன்னாள் நிரந்தர செயலாளர் டாக்டர் பிரதாப் இராமானுஜம், வைத்திய கலாநிதி ‘காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முல்லைத்தீவு அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அகில இலங்கை கம்பன் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் உயரிய விருதான ‘கம்பன் புகழ்” விருதினை இவ்வாண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ‘வரலாற்றை மாற்றியவன்!” என்ற புகழாரத்தோடு கழகத்தினர் வழங்கி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத்தின் முன்னாள் தலைவர் கு. அண்ணாமலையும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *