அழிவின் விளிம்பில் அரிய வகை காட்டுப் பூனை!
பல்லாஸ் பூனை (Pallas’s cat) அல்லது மனுல் என்பது மத்திய ஆசியாவில் காணப்படும் ஒரு சிறிய வகை காட்டுப் பூனை ஆகும்.
இவை மத்திய ஆசியாவின் மலைப்பகுதிகள் மற்றும் புல்வெளிகளில் வாழ்கின்றன. இந்தியாவில் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
இவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுவது மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் இவை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, 2002-ஆம் ஆண்டு முதல் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் (IUCN) இவை ‘அரிய வகை இனம்’ (Near Threatened) என அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.