சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் (13) தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை முதல் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், கூட்டத்திற்கு ஏற்ப மேலதிக பஸ்கள் இயக்கப்படும்.
இன்றும், நாளையும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப தனியார் பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படும்.
இன்றும், நாளையும் ரயில் சேவைகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன இருப்பினும், அனைத்து கடுகதி ரயில்கள் , தபால் ரயில்கள் மற்றும் நகராந்திர கடுகதி ரயில்கள் வழமை போல் இயங்கும்.
பொல்கஹவெல, அவிசாவளை, புத்தளம் மற்றும் காலி ஆகிய பகுதிகளிலிருந்து கொழும்பு வருவோருக்கான விசேட ரயில் சேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.