வெள்ளம்பிட்டியில் அமையப்பெற்றுள்ள SK Queen Campus சின் முதலாவது டிப்ளோமா பட்டமளிப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை 06.04.2026 பண்டாரநாயக்க ஞாபகாார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எஸ்,கே. குயின் கெம்பசின் தலைவி கலாநிதி சப்னாஸ் சிபான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுன்டேசனின் செயலாளர் திருமதி மரியம் ஹாசிம் உமர் கலந்து கொண்டு விருதுகளையும், வெற்றிப் பதங்கங்கள், மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

பாடசாலைக் கல்வியை முடித்த வீடுகளில் தங்கியிருக்கும் இளம் யுவதிகள் 50 பேர் எஸ்,கே. கெம்பஸ் ஊடாக ஒரு வருடம், ஆறுமதாங்கள், மூன்று மாத கால அழகு கலைத்துறை , மணப்பெண் அழங்காரம், உடை வடிவமைப்பு (பெஷன்) ஆடை அழங்காரம். ஆகிய துறைகளில் டிப்ளோமா பயிற்சிநெறிகளை வெற்றிகரமாக முடித்த இளம் யுவதிகளுக்கு பட்டமளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.

இப் பயிற்சி நெறிகளை பயின்ற யுவதிகள் யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, கொழும்பு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்காளாவர்.


கொழும்பு வெள்ளம்பிட்டியில் உள்ள இவ் எஸ்,கே. கெம்பஸ் ஊடாக இப் பயிற்சி நெறிகளை பயின்று முடித்த யுவதிகளின் மணப்பெண் ஆடை அலங்காரம் மற்றும் வடிவமைப்புத்துறையில் செயல் முறைப் பயிற்சியில் சித்தியடைந்த யுவதிகள் முறையே முதலாம் , இரண்டாம் , மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்க விசேட பரிசுகள், சான்றிதழ் பதக்கங்கள் மற்றும் டிப்ளோமா பட்டங்களும் பிரதம அதிதி மரியம் ஹாசீம் உமர் மற்றும் எஸ்,கே.குயின் பிரைவட் லிமிட்டின் பணிப்பாளர் எம்.சிபாஷ் மற்றும் கௌரவ அதிதி ஹமீட் நிசார் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்

இந் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பெற்றோர்கள், போதானாசிரியர்களும் கலந்து கொண்டதுடன் அதிதிகளுக்கும் இக் கெம்பசின் தலைவியினால் விசேட நினைவு சின்ன விருதுகளும் வழங்கி வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *