தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
நில்வலா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளில் கடல் நீர் (உவர் நீர்) உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குடிநீர் விநியோகத்தைப் பாதிக்கலாம்.
தற்போது பிரதான நீர்த்தேக்கங்களில் 75% நீர் உள்ளதால், இந்த சிறுபோகப் பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்க முடியும்.
னவே, பொதுமக்கள் நீரை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.