மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் அவசர உதவியாக 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த உதவி விரைவாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த உடனடி மற்றும் துரித உதவிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

வந்தடைந்துள்ள எரிபொருள் தொகையைத் தரையிறக்கி, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *